Home
Mobile

மிரண்டு போவீங்க! 24GB ரேம்.. 1TB மெமரி.. 2 சிப்செட்.. 165W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ஒரேவொரு போன்!

ஒரு போனில் 24GB ரேம், 1TB மெமரி, 2 சிப்செட், 165W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி என்று 2 ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான அம்சங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்றால், அந்த போனை கண்டு வியப்பு ஏற்படாமல் இருக்காது. இதுகுறித்த முழு விவரங்கள் இதோ.

இதுவரையில் வெளியான போன்களில் எதிலும் 24 ஜிபி ரேம் மற்றும் 2 சிப்செட் கொடுக்கப்படவில்லை. சொல்லப்போனால், ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus) போன்ற முன்னணி நிறுவனங்களே அதற்கான முயற்சியில் கூட ஈடுபடவில்லை. ஆனால், ரெட் மேஜிக் (Red Magic) என்னும் நிறுவனம், அந்த அம்சங்களை கொண்ட போனின் வெளியீட்டு தேதியையே அறிவித்து, உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது.

மிரண்டு போவீங்க! 2 சிப்செட்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

குறிப்பாக ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களையும் தட்டித்தூக்கும் வகையில், ரெட் கோர் ஆர் 2 (Red Core R2) என்னும் பிரத்யேகமான கேமிங் சிப்பை 2ஆவது சிப்செட்டாக தன்னுடைய போனில் கொடுத்துள்ளது. இந்த சிப்செட் கேமிங் விளையாடும்போது, பிங்கர்டிப் வைப்ரேஷன் மற்றும் ஷாக் (Fingertip Vibration And Shock) , சவுண்ட் எஃபெக்ட்ஸ் (Sound Effects), 3டி கன்ட்ரோல் எக்பெரியன்ஸ் (Control Experienc) ஆகியவற்றை ஜாய்ஸ்டிக் (Joystick) லெவலுக்கு வேறுபடுத்தி காட்டும்.

அதேபோல, சிறந்த ஹெட்போன் எக்பெரியன்ஸ் கொடுக்க 3.5 எம்எம் ஹெட்போன் ஜேக் (Headphone Jack) கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பிரத்யேகமான அம்சங்களை கொண்டிருக்கும் ஒரேவொரு போன்தான் ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ (Red Magic 8S Pro). இந்த போனின் மற்ற அம்சங்கள், விலை மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ அம்சங்கள்: இந்த போனில் 6.8 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இந்த ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் வருகிறது.

அந்த வகையில், சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த மாடலில் முதல் முறையாக 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுவே 24 ஜிபி ரேம் உடன் வெளியாகும் உலகின் முதல் போனாகும். இந்த நிறுவனத்தின் ரெட் மேஜிங் 8 ப்ரோ (Red Magic 8 Pro) போனில் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அது மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால், அதன் அப்டேட்டட் வெர்ஷனில் 24 ஜிபி ரேம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல 165W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. வெறும் 14 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 (Qualcomm Snapdragon 8+ Gen 2) சிப்செட் வருகிறது.

இந்த ரெட் மேஜிக் 8 ப்ரோ போன் மேட் (Matte), டைட்டானியம் (Titanium) மற்றும் வொய்டு (Void) ஆகிய கலர்களில் வெளியாக வாய்ப்புள்ளது. சீனாவில் ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் வெளியாகும். இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரூ.70 பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Red Magic 8S Pro Specifications Price And Launch Date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X