Home
Mobile

இது வேற ரகம்.. ஒரே போன் 2 சிப்செட்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 6000mAh பேட்டரி.. முழு லிஸ்ட் மிரள வைக்கும்!

கேமிங் பிரியர்களை வெறிகொள்ள செய்யும் வகையில், 24ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜ், கேமிங்காகவே பிரத்யேக ரெட் கோர் சிப்செட், கூலிங் சிஸ்டம், போதாதற்கு 6000mAh பேட்டரி என்று எந்த போனிலும் இல்லாத அம்சங்களுடன் ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன் வெளியானது.

ஆனால், இந்த போன் சீனாவில் மட்டும் விற்பனைக்கு வந்ததால், இந்தியாவில் இருக்கும் கேமிங் ஸ்மார்ட்போன் பிரியர்கள் அதிருப்தி அடைந்து விட்டனர். இங்கு, எப்போது வெளியாகும் என்று கொக்கு போல காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. இவ்வளவு எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இந்த ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ (Red Magic 8S Pro) போனில் அப்படி என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

இது வேற ரகம்.. 2 சிப்செட்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. 6000mAh பேட்டரி!

ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ அம்சங்கள்: இந்த ரெட் மேஜிக் போன் 6.8 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 960Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. அதோடு 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1440Hz டிம்மிங் பிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Octa Core Snapdragon 8 Gen 2) என்னும் அட்வான்ஸ் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ரெட்மேஜிக் ஓஎஸ் 8.0 (Redmagic OS 8.0) வருகிறது. அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனையே தூக்கிப்பிடிக்கும் வகையில், ரெட் கோர் ஆர் 2 (Red Core R2) என்னும் பிரத்யேகமான கேமிங் சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப் கேமிங் ஜாய்ஸ்டிக்கில் (Joystick) கொடுக்கப்படும் பிங்கர்டிப் வைப்ரேஷன் (Fingertip Vibration), ஷாக் வைப்ரேஷன், (Shock Vibration), சவுண்ட் எஃபெக்ட்ஸ் (Sound Effects), 3டி கன்ட்ரோல் எக்பெரியன்ஸ் ( 3D Control Experienc) அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

இந்த சிப்பால் போன் வெப்பமடையாமல் இருக்க மல்டி டைமன்சினல் லிக்விட் கூலிங் டெக்னாலஜி (LIQUID-COOLING TECHNOLOGY) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஜிஎன்5 (Samsung GN5) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி (120 டிகிரி) அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

ஆம்னிவிஷன் ஓவி16ஏ1க்யூ (OmniVision OV16A1Q) சென்சாருடன் கூடிய 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 24 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் என்று 4 வேரியண்ட்களில் வருகிறது.

அதேபோல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. வெறும் 15 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இந்த ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன் டைட்டானியம் (Titanium), மேட் (Matte) மற்றும் வொய்டு (Void) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந் போனின் ஆரம்ப விலையை பொறுத்தவரையில், ரூ.57,698 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெளியாகவில்லை. இதனால் கேமிங் பிரியர்கள் எப்போது அந்த போன் இந்தியாவில் வெளியாகும் என்று காத்துக்கொண்டிருக்கும் வேளையில், கிஸ்டாப் (Giztop) தளத்தில் ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஆர்டர் செய்தால், இந்தியாவில் டெலிவரி செய்யப்படும்.

இதனால், இந்திய ஸ்மார்ட்போன் பிரியர்கள் குஷியில் இருக்கின்றனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Red Magic 8S Pro Gaming Chip Smartphone Available on Giztop Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X