Home
Mobile

3 மணி நேரத்துல காலி.. மொத்த சீனாவும் போட்டி போட்டு வாங்கிய Redmi போன்.. என்ன ஸ்பெஷல்? இந்தியாவுக்கு வருமா?

கடந்த ஜூலை 19 ஆம் தேதி அன்று, ஷாவ்மீ நிறுவனம் ஒரு பிரம்மாண்ட வெளியீட்டு நிகழ்வை நடத்தியது. அதில் ஷாவ்மீ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களான ஷாவ்மீ மிக்ஸ் ஃபோல்ட் 4 (Xiaomi Mix Fold 4) மற்றும் Xiaomi Mix Flip (ஷாவ்மீ மிக்ஸ் ஃபிளிப்) ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ரெட்மி பிராண்டிங்கின் கீழ் ரெட்மி கே70 அல்ட்ரா (Redmi K70 Ultra) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த நாளே (அதாவது ஜூலை 20 ஆம் தேதியே) சீனவில் விற்பனைக்கு வந்தது.

ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த வேகத்தில், சீன வாடிக்கையாளர்கள் அதை போட்டிபோட்டு கொண்டு வாங்கி உள்ளனர். இதுகுறித்து ஷாவ்மீ நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரின் படி, ரெட்மி கே 70அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்த வெறும் மூன்று மணி நேரத்திற்குள் 2024 ஆம் ஆண்டிற்கான விற்பனை சாதனையை முறியடித்துள்ளது.

மொத்த சீனாவும் போட்டி போட்டு வாங்கிய Redmi போன்!

இந்த சாதனை ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மீதான வலுவான ஈர்ப்பு மற்றும் நுகர்வோர் மத்தியில் இந்த ஸ்மார்ட்போனிற்கு உள்ள தேவையை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும் முதல் 3 மணி நேரத்தில் சரியாக எத்தனை யூனிட்கள் விற்கப்பட்டன; இது எந்த ஸ்மார்ட்போனின் பழைய சேல்ஸ் ரெக்கார்ட்டை முறியடித்தது என்கிற விவரங்களை ஷாவ்மீ பகிரவில்லை.

ரெட்மி கே70 அல்ட்ராவின் விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.33,400 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆனது தோராயமாக ரூ.36,900 க்கும், 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.41,500 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி கே70 ஸ்மார்ட்போனின் சுப்ரீம் சாம்பியன் எடிஷனின் (Supreme Champion Edition) விலையை பொறுத்தவரை, இந்த ஸ்பெஷல் எடிஷனின் 24ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சீனாவில் தோராயமாக ரூ.46,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் OLED 8T LTPS டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை, இது டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட் மற்றும் டி1 கிராபிக்ஸ் சிப், LPDDR5x ரேம், யூஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி கே70 அல்ட்ரா ஸ்மாட்போன் ஆனது முன்பக்கத்தில் 20 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ரியர் பேனலில் OIS ஆதரவுடன் Sony IMX906 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8-எம்ஜிஏபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ் + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் ஸ்பீக்கர்ஸ், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரண்ட் ஸ்கேனர், ஐஆர் பிளாஸ்டர், மெட்டல் பிரேம் மற்றும் ஐபி68-ரேட்டட் சேஸ் போன்றவைகளை கொண்டுள்ளது.

ரெட்மி கே70 அல்ட்ரா இந்தியாவிற்கு வருமா? பொதுவாக ரெட்மி நிறுவனம் அதன் பிளாக்ஷிப் கே சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைக்கு கொண்டுவருவதில்லை. கடைசியாக இந்தியாவில் அறிமுகமான ரெட்மி கே சீரிஸ் ஸ்மார்ட்போன் ரெட்மி கே50ஐ ஸ்மார்ட்போன் தான். ஆனால் நிலைமை மெல்ல மெல்ல மாறுவருகிறது.

முன்னதாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு வந்த ஷாவ்மீ சிவி சீரீஸ் ஸ்மார்ட்போன், முதல் முறையாக இந்தியாவிலும் அறிமுகமானது. அது கடந்த ஜூன் மாதம் அறிமுகமானஷாவ்மீ 14 சிவி ஸ்மார்ட்போன் ஆகும். இது ரீபிராண்டட் வெர்ஷன் ஆக (அதாவது ஒரே அம்சங்களுடன் வேறு பெயரில்) இந்தியாவிற்கு வராமல் நேரடியாக அறிமுகமானது. அதேபோல ரெட்மி கே70 அல்ட்ரா மாடலும் அறிமுகம் செய்யப்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Record Breaking Sale Redmi K70 Ultra Remarkable Success in Just 3 Hours of First sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X