Home
Mobile

ரூ.500, ரூ.1000 லாம் இல்ல.. அதுக்கும் மேல.. பொசுக்கு பொசுக்குனு விலை குறைக்கப்பட்ட 5 ஃபேமஸ் போன்கள்!

நீங்களொரு புதிய ஸ்மார்ட்போனை (New Smartphone) வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம். ஏனென்றால் ஒன்பிளஸ் (OnePlus), சியோமி (Xiaomi) & மோட்டோரோலாவின் (Motorola) கீழ் வாங்க கிடைக்கும் 5 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது பெரிய அளவிலான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு என்றதுமே ரூ.500 அல்லது ரூ.1000 எஎன்கிற அளவிலான ப்ரைஸ் கட் (Price Cut) என்றும்.. எல்லாமே சுமாரான மாடல்கள் என்றும் நினைத்து விடாதீர்கள். நாம் இங்கே பார்க்கப்போகும் எல்லாமே அந்தந்த பிராண்டின் ஃபேமஸ் மாடல்களாகும்; மேலும் ரூ.3,000 - ரூ,10,000 வரையிலான விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

பொசுக்கு பொசுக்குனு விலை குறைக்கப்பட்ட 5 ஃபேமஸ் போன்கள்!

01. ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R): கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 10ஆர் சமீபத்தில் 2வது விலைக்குறைப்பைப் பெற்றது. கடந்த ஆண்டு ரூ.4,000 என்கிற விலைக்குறைப்பை தொடர்ந்து இப்போது மேலும் ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளது. தற்போது இது ரூ.31,999 முதல் வாங்க கிடைக்கிறது.

இது ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி (80W) ஆப்ஷனின் விலையாகும். இந்த விலைக்குறைப்பு மற்ற 2 ஸ்டரோஜ் ஆப்ஷன்களான 12ஜிபி + 256ஜிபி (80W) மற்றும் 12ஜிபி + 256ஜிபி (150W) மீதும் பொருந்தும். அவைகள் முறையே ரூ.35,999 மற்றும் ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கின்றன.

02. சியோமி 12 ப்ரோ (Xiaomi 12 Pro): கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி 12 ப்ரோவானது மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது மற்றும் அந்த இரண்டுமே ரூ.10,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளன. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.52,999 க்கும், 12ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.54,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

03. சியோமி 11 லைட் என்இ 5ஜி (Xiaomi 11 Lite NE 5G): கடந்த செப்டம்பர் 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி 11 லைட் என்இ 5ஜி மீது ரூ.3,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியானது. தற்போது இதன் 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.26,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.28,99 9க்கும் வாங்க கிடைக்கிறது.

04. மோட்டோ எட்ஜ் 30 (Moto Edge 30): கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போது மோட்டோ எட்ஜ் 30-யின் 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ.27,999 மற்றும் ரூ.29,999 க்கு வெளியானது. தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் ரூ.3000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை வீழ்ச்சிக்கு பிறகு, 6ஜிபி ரேம் மாடல் ரூ.24,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் மாடல் ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இதன் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் சிப்செட், 6.5 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 33W டர்போ ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 4020mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

05. மோட்டோ ஜி72 (Moto G72): கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலாவின் இந்த 108எம்பி கேமரா ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.18,999 ஆகும். ஆனால் சமீபத்தில் இதன் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Recent Mobile Price Cut in India 5 Smartphones From OnePlus Xiaomi and Moto Gets Price Drop
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X