Home
Mobile

அடுத்த சிக்ஸர்.. NOKIA பெயரை காப்பாற்றிய HMD.. வெறும் ரூ.3499 க்கு டூயல் சிம் 4G போன்.. என்ன மாடல்?

அட்டகாசமான விலையில் எச்எம்டி க்ரெஸ்ட் 5ஜி (HMD Crest 5G) மற்றும் எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி (HMD Crest Max 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய கையோடு.. நோக்கியா (NOKIA) பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமத்தை கொண்டுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது இன்னொரு புதிய மாடலையும் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இம்முறை ஸ்மார்ட்போன் பிரிவில் அல்ல, இந்த புதிய அறிமுகம் ஃபீச்சர் போன் (Feature Phone) பிரிவில் நடக்கவுள்ளது. அதென்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? எக்ஸ் தளத்தில் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான எச்எம்டி மீம் (HMD Meme) வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, எச்எம்டி குளோபல் நிறுவனமானது கூடிய விரைவில் இன்னொரு ரீபிராண்டட் மாடலை (Rebranded Model) அறிமுகம் செய்யலாம். அது எச்எம்டி 225 4ஜி (HMD 225 4G) மாடலாக இருக்கலாம்.

HMD: வெறும் ரூ.3499 க்கு டூயல் சிம் 4G போன்.. என்ன மாடல்?

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? பெயரை வைத்து பார்க்கும் போது, இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நோக்கியா 225 4ஜி (NOKIA 225 4G) மாடலின் "மறுபெயரிடப்பட்ட" மாடலாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் எச்எம்டி 225 4ஜி போனில் 400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான ஒரு சிறிய 2.4-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

ப்ராசஸரை பொறுத்தவரை, இது யுனிசாக் டி107 சிப்செட் உடன் வரலாம். இது பொதுவாக என்ட்ரி-லெவல் ஃபீச்சர் போன்களில் காணப்படும் ஒரு சாதாரண சிப்செட் ஆகும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் எச்டி வீடியோக்களை ரெகார்ட் செய்யும் திறன் கொண்ட சிங்கிள் 2-மெகாபிக்சல் கேமரா பேக் செய்யப்படலாம்.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது ப்ளூடூத் 5.0,பேஸிக் இண்டர்நெட் கனெக்ஷனிற்கான 4ஜி எல்டிஇ, டூயல் சிம் ஸ்லாட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்றவைகளை கொண்டிருக்கும். இன்னொரு லீக்ஸ் தகவலானது எச்எம்டி 225 4ஜி போனில் எப்எம் ரேடியோ மற்றும் பேஸிக் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங் இடம்பெறும் என்றும் கூறுகிறது.

எச்எம்டி 225 4ஜி போனின் ஸ்டோரேஜ் மற்றும் ரேம் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. பெரும்பாலும் இது 128எம்பி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 64எம்பி ரேம் போன்ற குறைந்த அளவிலான கெப்பாசிட்டி உடன்தான் வரும். அதாவது எச்எம்டி 225 4ஜி-யின் அம்சங்கள் நோக்கியா 225 4ஜி போனில் நாம் கண்டதை போலவே இருக்கும். இது வெறுமனே ஒரு ரீபிராண்ட் ஆக இருக்கும்.

என்ன விலைக்கு வரும்? பெரும்பாலும் எச்எம்டி 225 4ஜி போன் ஆனது நோக்கியா 225 4ஜி போனின் விலைக்கே அறிமுகம் செய்யப்படலாம். தற்போது நோக்கியா 225 4ஜி மாடலின் (128எம்பி ஸ்டோரேஜ் + 64எம்பி ரேம் ஆப்ஷன்) பிளிப்கார்ட் வழியாக ரூ.3499 க்கு வாங்க கிடைக்கிறது. ஆகவே எச்எம்டி 225 4ஜி மாடலின் விலையும் ரூ.3500 - ரூ.4000 க்குள் இருக்கலாம்.

எச்எம்டி க்ரெஸ்ட், எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி போன்களின் விலை நிர்ணயம் என்ன? எச்எம்டி க்ரெஸ்ட் ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.14,999 ஆகும். இருப்பினும் இது ரூ.12,999 என்கிற சிறப்பு சலுகை விலைக்கு வாங்க கிடைக்கும். இதேபோல எச்எம்டி க்ரெஸ்ட் மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.16,999 ஆகும். இருப்பினும் இது ரூ.14,999 என்கிற சிறப்பு சலுகை விலைக்கு வாங்க கிடைக்கும். இந்த சலுகை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. Photo Courtesy: HMD_MEME'S / X Platform

More from GizBot

Best Mobiles in India

English summary
Reborn NOKIA HMD Global To Launch HMD 225 4G Feature Phone with Dual SIM Support Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X