Home
Mobile

இன்று அறிமுகமாகும் அசத்தலான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்: முழு விவரம்.!

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இன்று மாலை 5.30 மணி அளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரியல்மி ஜிடி 5ஜி

ரியல்மி ஜிடி 5ஜி

மேலும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் உடன் ரியல்மி பேட், ரியல்மி Robot Vacuum உள்ளிட்ட பல்வேறு சாதனங்களும்அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே சீனாவில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது, தற்போது தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இப்போது ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின்
பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

இந்த ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். எனவே விரைவில் இந்த ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃ

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ப்ளூ, கிரே, லெதர் போன்ற நிறங்களில் இந்த சாதனம்அறிமுகம் செய்யப்படும்.

8ஜிபி/12ஜிபி ரேம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக ரியல்மி ஜிடி 5ஜி சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realmy GT 5G smartphone launches today: Full details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X