பட்ஜெட் விலையில் முரட்டுத்தனமான ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

ரியல்மி நிறுவனம் மொத்த இந்தியாவும் அதிகம் எதிர்பார்த்த 64மெகாபிக்சல் கொண்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனை புது தில்லியில் நடந்த அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக விலையை மீறிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 விற்பனை எப்போது

விற்பனை எப்போது

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் ஆனது வரும் செப்டம்பர் 16-ம் தேதி அன்றுநண்பகல் 12மணி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிளிப்கார்ட் வலைதளத்தின்வழியே இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறப்பாக ஹைப்பர்போலா லைட் எஃபெக்டுடன் புதிய ஐடி வடிவமைப்பை பெறும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த ஏவுகணை சோதனை.!உள்நாட்டு தொழில்நுட்பத்தில் பாகிஸ்தானை கதிகலங்க வைத்த ஏவுகணை சோதனை.!

மிரட்டலான கேமரா

மிரட்டலான கேமரா

ரியல்மி எக்ஸ்டி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி

அசத்தலான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

வைரல்: தகனம் செய்தபின் மீண்டும் உயிருடன் வந்து ஷாக் கொடுத்த நபர்!வைரல்: தகனம் செய்தபின் மீண்டும் உயிருடன் வந்து ஷாக் கொடுத்த நபர்!

 பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உறுதி செய்யும் வகையில் டால்பி அட்மோஸ்இ னுபைவையட றுநடடடிநiபெ ஆதரவுகளை கொண்டுள்ளது. பின்பு ரியல்மி எக்ஸ்டி சாதனத்துடன் வயர்லெஸ் இயர்போன் மற்றும் பவர்பேங்க் போன்ற சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் விலை ரூ.16/999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் விலை ரூ.18,999/-

Best Mobiles in India

English summary
Realme XT Launched in India: Price, Sale Date, Specifications, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X