64எம்பி கேமரா கொண்ட ரியல்மி XT ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! மிஸ் பண்ணாதீங்க ...
தற்சமயம் பிளிப்கார்ட் வலைதளத்தில் ரியல்மி எகஸ்டி (XT) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால், கண்டிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகுறைப்பு
அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எகஸ்டி ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எகஸ்டி ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.15,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எகஸ்டி ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.18,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அட்டகாசமான டிஸ்பிளே
ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறப்பாக ஹைப்பர்போலா லைட் எஃபெக்டுடன் புதிய ஐடி வடிவமைப்பை பெறும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

மிரட்டலான கேமரா
ரியல்மி எக்ஸ்டி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உறுதி செய்யும் வகையில் டால்பி அட்மோஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications