டிசம்பர் 17: இந்தியாவில் ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் புதிய ரியல்மி எக்ஸ்டி 730ஜி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இதனுடன் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு வாட்டர்டிராப் நாட்ச் டிஸ்பிளே கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்த அருமையாக இருக்கும். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ரியல்மி எக்ஸ்டி 730ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்க பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் என பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவரும்.

ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவு உள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி எக்ஸ்டி 730ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னர்படிராகன் 730ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமா ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ரியல்மி எக்ஸ்டி 730ஜி சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி எக்ஸ்டி 730ஜி சாதனத்துடன் ரியல்மி இயர்பட்ஸ் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது, அதன்படி கருப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இந்த இயர்பட்ஸ் சாதனம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications