விரைவில் அறிமுகமாகும் ரியல்மி எக்ஸ்9, ரியல்மி எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்9, ரியல்மி எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் அதிநவீன அம்சங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது
இந்த சாதனங்களின் பல்வேறு அமசங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்9
வெளிவந்த தகவலின்படி, ரியல்மி எக்ஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080
பிக்சல் தீர்மானம், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றம் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்தஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ரியல்மி எக்ஸ்9 ஸ்மார்ட்போன் ஆனது 4400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தில்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இதுதவிர Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் ரியல்மி எக்ஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என
மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீகேமரா ஆதரவைக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி எக்ஸ்9 ப்ரோ
ரியல்மி எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் Samsung E3 S-AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும்என்றுகூறப்படுகிறது. மேலும் 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாககொண்டு வெளிவரும் ரியல்மி எக்ஸ்9 ப்ரோ மாடல்.

ரியல்மி எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி எக்ஸ்9 ப்ரோ மாடல்.

ரியல்மி எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications