Home
Mobile

ரியல்மி எக்ஸ் 7 அறிமுகத்திற்கு முன் கசிந்த தகவல்: என்னென்ன அம்சங்கள் தெரியுமா?

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகத்திற்கு முன்னதாக அதன் அம்சங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் முன்னதாகவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ் 7 இந்திய விலை

ரியல்மி எக்ஸ் 7 இந்திய விலை

ரியல்மி எக்ஸ் 7 இந்திய விலை குறித்து பார்க்கையில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் ரூ.19,999 என இருக்கும் என டிப்ஸ்டர் தெரிவிக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.21,999 ஆக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீடியாடெக் டைமென்சிட்டி 800யூ பிராசஸர்

மீடியாடெக் டைமென்சிட்டி 800யூ பிராசஸர்

ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 800யூ பிராசஸர் வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

4310 எம்ஏஎச் பேட்டரி

4310 எம்ஏஎச் பேட்டரி

பேட்டரி விபரம் வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்காக இந்த ஸ்மார்ட்போனில் மெமரி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இது 4310எம்ஏஎச் பேட்டரியுடன் 50W சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme X7 Specification Leaked Before Launching: Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X