5ஜி சாதனம் வாங்க ஐடியா இருக்கா: இன்று தொடங்கும் ரியல்மி எக்ஸ்7 விற்பனை!
ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் முதல் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன்
ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் முதல் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. 5ஜி ஆதரவோடு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோவுடன் வருகிறது. 5ஜி சேவை தற்போது இந்தியாவில் இல்லை என்றாலும் விரைவில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ் 7 விலை மற்றும் அம்சங்கள்
ரியல்மி எக்ஸ் 7 விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 6 ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.19,999 எனவும் 8ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.21,999 எனவும் விற்பனைக்கு வருகிறது. இந்த சாதன் பிளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இகாமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது. ஆஃப்லைன் விற்பனை இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ் 7 நெபுலா மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் ரியல்மி ஆன்லைன் ஸ்டோரில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும்போது ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல் ஆக்சிஸ் வங்கி அட்டை பயன்படுத்தி பிளிப்கார்ட்டில் வாங்கும்போது ரூ.1500 தள்ளுபடி கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் 7 சிறப்பம்சங்கள்
ரியல்மி எக்ஸ் 7 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது பஞ்ச் ஹோல் கட் அவுட், 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 4310 எம்ஏஎச் பேட்டரி, 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

64 எம்பி முதன்மை கேமரா
இதில் 64 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆகியவை அடங்கும். சாதனத்தின் பேட்டரி ஆயுள் நீடிப்பானதாக இருக்கும். 5ஜி சாதனம் வாங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications