ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் அறிமுகமாவது உறுதி: நேரமும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்!

|

ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் மீடியா டெக் டைமன்சிட்டி சிப்செட், 64 எம்பி குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களோடு வருகிறது.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

ரியல்மி சிஇஓ மாதவ்ஷெட்டி டுவிட்டரில் ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார். சரியான வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸில் ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும்.

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ

ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் முதல் 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்தது. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்., 2021 ஆம் ஆண்டில் 5ஜி தொழில்நுட்பத்தை ஜனநாயகமாக்கும் (democratise 5G technology in 2021) எனவும் பல்வேறு சாதனங்களில் 5ஜி அம்சம் கொண்டுவரப்படும் எனவும் டுவிட்டரில் மாதவ் ஷெத் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும்

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் வெளியீட்டு தேதியை இன்னும் நிறுவனம் வெளியிடவில்லை. ரியல்மி பிப்ரவரி மாதம் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜியை வெளியிட்டது. சரியாக ஒருவருடம் கழித்து 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என கூறப்படுகிறது.

64 எம்பி குவாட் கேமரா அமைப்பு

64 எம்பி குவாட் கேமரா அமைப்பு

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸில் வெளியாகும் இரண்டு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட பெரிய பேட்டரி போன்ற அம்சங்களோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சாதனங்களும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஓஎஸ் 7 அடிப்படையிலான ரியல்மி யுஐ மூலம் இயங்கும்.

4 வீரர்களுடன் விண்ணுக்கு பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்: இது ஒரு புதிய சகாப்தம்- பாராட்டும் தலைவர்கள்4 வீரர்களுடன் விண்ணுக்கு பாய்ந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்: இது ஒரு புதிய சகாப்தம்- பாராட்டும் தலைவர்கள்

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், ரியல்மி எக்ஸ் 7 1,799 யுவான் சுமார் ரூ.20,000 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டுடன் வரும். அதேபோல் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ, 2,199 யுவான் இந்திய மதிப்புப்படி ரூ.24,500 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டுடன் வரும்.

ரியல்மி எக்ஸ்7 சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ்7 சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 6 அங்குல முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 2400 ×1080 பிக்சல் தீர்மானத்துடன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ செயலி மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஹைரெஸ் ஆடியோவுடன் வருகிறது.

32 மெகாபிக்சல் செல்பி கேமரா

32 மெகாபிக்சல் செல்பி கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமராக்களுடன் வருகிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 6.55 அங்குல முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 2400 ×1080 பிக்சல் தீர்மானத்துடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ செயலி மூலம் இயக்கப்படுகிறது.

65W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

65W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

4500 எம்ஏஎச் பேட்டரி 65W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 64 எம்பி பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் நான்காவது கேமராவுடன் வருகிறது. அதோடு 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது

File Images

Best Mobiles in India

English summary
Realme X7 Series Launching Confirmed in India: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X