Home
Mobile

தெறிக்கவிடும் அம்சங்கள்: 8Gb ரேம், 64 Mp கேமராவுடன் ரியல்மி எக்ஸ் 7,ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

ரியல்மி நிறுவனம் இறுதியாக தனது புதிய ரியல்மி எக்ஸ் 7 சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. இந்த தொடரில் ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளது.

Realme X7 மற்றும் Realme X7 Pro

Realme X7 மற்றும் Realme X7 Pro

Realme X7 மற்றும் Realme X7 Pro விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி ரூ.19,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி ரூ.21,999 எனவும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.29,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது நெபுலா மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மிஸ்டிக் பிளாக் மற்றும் பேண்டஸி வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

அதேபோல் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ பிளிப்கார்ட் மூலமாக பிப்ரவரி 10 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி தள்ளுபடி அறிவிப்பு

உடனடி தள்ளுபடி அறிவிப்பு

ஐசிஐசிஐ வங்கி கிரெட் கார்டுகள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் வாங்கும்போது பிளாட் ரூ.2000 உடனடி தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கி அட்டைகள் மூலம் மேற்கொள்ளப்படும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1500 உடனடி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வரும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இதில் யூஎஸ்பி டைப்சி போர்ட், இரட்டை சிம் ஆதரவு ஆகியவை இருக்கிறது.

பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

ரியல்மி எக்ஸ்7 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ செயலி மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் இந்தி ஸ்மார்ட்போன் வருகிறது. அதோடு இதில் 64 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகிய டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 4310 எம்ஏஎச் பேட்டரியுடன் 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme X7, Realme X7Pro Launched in India With 8Gb RAM, 64 Mp Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X