பிப்., 4 வரை காத்திருங்கள்: 8ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்களோடு ரியல்மி எக்ஸ் 7, எக்ஸ் 7 ப்ரோ!
கடந்த வாரம் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி., இந்தியாவில் புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்
இருப்பினும் ரியல்மி எக்ஸ் 7 சீரிஸின் இந்திய வெளியீட்டு தேதியை சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. நாட்டின் முன்னணி தொழில்நுட்ப பதிவர் அமித் பவானியிடம் இருந்து புதிய அறிக்கை ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸின் இந்திய வெளியீட்டு படத்தை அவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ
ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் நிறுவனத்தின் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், ரியல்மி எக்ஸ் 7 மாடலின் வண்ண விருப்பத்தை காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மீடியா டெக் டைமன்ஷன் 1200 செயலி ஆதரவு
ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது மீடியா டெக் டைமன்ஷன் 1200 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் முன்னதாகவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி
6.4 இன்ச் டிஸ்ப்ளே 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32 எம்பி செல்பி கேமராவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் 800யூ 5ஜி செயலியோடு வருகிறது.

6.55 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே
ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கையில், இது 6.55 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியா டெக் டைமன்ஷன் 1000 ப்ளஸ் செயலி, 8 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமராக்கள், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை இருக்கிறது. இது 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications