இன்னும் இரண்டே நாள்தான்- ரூ.3000 தள்ளுபடி: ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ வாங்க சரியான நேரம்!
ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ தற்போது போர்ட்டலில் கார்னிவல் விற்பனையின் போது பிளிப்கார்ட்டில் ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 ப்ரோ 5ஜி
ரியல்மி எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விலை குறைப்பை பெற்றிருக்கிறது. பிளிப்கார்ட்டில் ரூ.3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட்டில் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கார்னிவல் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 5ஜி விலை
ரியல்மி எக்ஸ் 7 5ஜி சாதனமானது ரூ.21,999-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.19,999 ஆக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 7 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ தள்ளுபடி
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.29,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ரூ.26,999 ஆக விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி ஸ்மார்ட்போனானது நெபுலா, ஸ்பேஸ் சில்வர், பேண்டஸி மற்றும் மிஸ்டிக் பிளாக் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரியல்மி எக்ஸ் 7, ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. Realme X7 மற்றும் Realme X7 Pro விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி ரூ.19,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதி ரூ.21,999 எனவும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.29,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வண்ண விருப்பங்கள்
ரியல்மி எக்ஸ் 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும் வண்ண விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இது நெபுலா மற்றும் ஸ்பேஸ் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மிஸ்டிக் பிளாக் மற்றும் பேண்டஸி வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள்
ரியல்மி எக்ஸ்7 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ செயலி மூலம் இயக்கப்படுகிறது.

65 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வரும் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இதில் யூஎஸ்பி டைப்சி போர்ட், இரட்டை சிம் ஆதரவு ஆகியவை இருக்கிறது.

ரியல்மி எக்ஸ்7 சிறப்பம்சங்கள்
ரியல்மி எக்ஸ்7 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ செயலி மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் இந்தி ஸ்மார்ட்போன் வருகிறது. அதோடு இதில் 64 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகிய டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 4310 எம்ஏஎச் பேட்டரியுடன் 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.


Click it and Unblock the Notifications