Home
Mobile

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய சாதனம் MediaTek Dimensity 1000+ பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸமார்ட்போன் மாடல்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1000+ பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி எகஸ்7 ப்ரோ அல்ட்ரா

இந்த ரியல்மி எகஸ்7 ப்ரோ அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

ரியல்மி எகஸ்7 ப்ரோ அல்ட்ரா சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி எகஸ்7 ப்ரோ அல்ட்ரா மாடல். இந்த சாதனத்தின் அனைத்து அம்சங்களும் அருமையாக உள்ளது,ஆனால் பேட்டரி அம்சம் மட்டும் அவ்வுளவு சரியாக இல்லை. அதாவது 5000 எம்ஏஎச் பேட்டரி அல்லது அதற்கு அதிகமான சக்தி கொண்ட பேட்டரிஇடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ரியல்மி எகஸ்7 ப்ரோ அல்ட்ரா சா

ரியல்மி எகஸ்7 ப்ரோ அல்ட்ரா சாதனத்தில் இரட்டை சிம், 4ஜி, வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்/ க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.25,695-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme X7 Pro Ultra Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X