Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்: என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்று மதியம் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இதனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 12-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

குறிப்பாக இன்று 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்ம எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999-க்கு விற்பனைக்கு வரும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 கேஷ்பேக் கிடைக்கும்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவு மற்றும் 2500nits பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

டால்பி அட்மோஸ்

இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி எக்ஸ்7 ப்ரோ மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1000+

ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1000+

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 1000+ வசதி உள்ளது. இதனுடன் மாலி-ஜி77 எம்சி9 ஜிபியு ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா மற்றும் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

4 ஜி வோல்டிஇ, வைஃபை 6

அதேபோல் இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11 , புளூடூத் 5, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5) / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் இரட்டை சிம் ஆதரவு உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ மிஸ்டிக் பிளாக் மற்றும் பேண்டஸி வண்ணங்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme X7 Pro Starts Its First Sale Today Via Flipkart Know The Price And Specifications: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X