Realme X7 Pro, Realme X7 விரைவில் அறிமுகம்.. எப்போது தெரியுமா?

|

ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவில் புதிய X7 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து ரியல்மி நிறுவனம், அடுத்த மாதம் இந்தியாவில் இந்த புதிய X7 ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

டிப்ஸ்டர் முகுல் சர்மா கூற்று படி, ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் வரும் டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 7 புரோ 5 ஜி மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ஆகிய இரண்டு மாடல்கள் இந்திய பிஐஎஸ் சான்றிதழிலுடன் காணப்பட்டுள்ளது. இந்த தகவலை டிப்ஸ்டர் சுதான்ஷு கண்டுபிடித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மாடல் எண்

மாடல் எண்

துரதிர்ஷ்டவசமாக, மாடல் எண் RMX2121 தவிர ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் அவர் கண்டறிந்த பட்டியலில் பட்டியலிடப்படவில்லை என்று கூறியுள்ளார். புதிய ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்கு இன்னும் சிறிய கால இடைவெளி மட்டுமே இருக்கிறது என்பதை பிஐஎஸ் தகவல் நமக்கு உணர்த்துகிறது. சீன சந்தையில் அறிமுகமான ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் சிறப்பம்சங்களை இப்பொழுது பார்க்கலாம்.

நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர் வாங்குவதில் புதிய நடைமுறை: இனி சிலிண்டர் வாங்க இது கட்டாயம்!

Realme X7 Pro சிறப்பம்சம்

Realme X7 Pro சிறப்பம்சம்

  • 6.55' இன்ச் உடன் கூடிய 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
  • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் ரெட்ரோ போர்ட்ரெய்ட் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
  • 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • பேட்டரி
    • டிஸ்பிளே கைரேகை சென்சார்
    • சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
    • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ
    • 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ
    • டூயல் 4 ஜி வோல்டிஇ
    • வைஃபை 6 802.11ax
    • புளூடூத் 5
    • ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5) / க்ளோனாஸ்
    • என்எப்சி
    • யூ.எஸ்.பி டைப்-சி
    • 65W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
    • 4500 எம்ஏஎச் பேட்டரி
    • Realme X7 சிறப்பம்சம்

      Realme X7 சிறப்பம்சம்

      • 6.43' இன்ச் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
      • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன்
      • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800U பிராசஸர்
      • 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ்
      • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
      • 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸ்
      • 2 மெகாபிக்சல் ரெட்ரோ போர்ட்ரெய்ட் லென்ஸ்
      • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
      • 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
      • சென்சார்
        • டிஸ்பிளே கைரேகை சென்சார்
        • சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
        • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ
        • 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ
        • டூயல் 4 ஜி வோல்டிஇ
        • வைஃபை 6 802.11ax
        • புளூடூத் 5
        • ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5) / க்ளோனாஸ்
        • என்எப்சி
        • யூ.எஸ்.பி டைப்-சி
        • 65W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்
        • 4300 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme X7 Pro, Realme X7 tipped to launch in India next month : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X