Realme எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் 12 ரேம் மற்றும் 3 கேமராவுடன் அறிமுகம்..

|

ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ரியல்மி எக்ஸ் 7 5 ஜி மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5 ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தத் தொடரின் சமீபத்திய சேர்த்தல் தான் இந்த புதிய ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் ஆகும். இந்த இரண்டு மாடல்களும் செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிப்ரவரியில் இந்திய சந்தைக்குக் கொண்டு வரப்பட்டன.

புதிய ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன்

புதிய ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன்

புதிய ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் சற்று மாற்றியமைக்கப்பட்ட விவரக்குறிப்புகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பின்புற கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்பிள் விகிதம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மறுபுறம், ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ 5 ஜி ஒற்றை 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் இது குவாட் ரியர் கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் போனின் விலை மற்றும் விற்பனை விபரம்

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் போனின் விலை மற்றும் விற்பனை விபரம்

ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் சீனாவில் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் சிஎன்ஒய் 2,299 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .25,600 ஆகும். அதேபோல், இதன் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் சிஎன்ஒய் 2,599 விலையில் கிடைக்கிறது. இது தோராயமாக ரூ. 29,000 ஆகும். புதிய ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் போன் பிளாக் ஃபாரஸ்ட் மற்றும் கேஸில் ஸ்கை வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ரியல்மி சீனா ஆன்லைன் ஸ்டோர் வழியாகப் விற்பனைக்கு வருகிறது.

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.! அதிரடி மாற்றங்கள்.!கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.! அதிரடி மாற்றங்கள்.!

Realme X7 Pro எக்ஸ்ட்ரீம் எடிஷன் சிறப்பம்சம்

Realme X7 Pro எக்ஸ்ட்ரீம் எடிஷன் சிறப்பம்சம்

இது 6.55 இன்ச் முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளேவுடன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன், 360 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதம் மற்றும் 92.1 சதவீதம் விகிதம். 1,200 நைட்டுகளின் உச்ச பிரகாசத்தை இந்த டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட் ஆல் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா

டிரிபிள் ரியர் கேமரா

ரியல்ம் எக்ஸ் 7 ப்ரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் ஒரு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 லென்ஸும், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் எஃப் / 2.25 லென்ஸும், 2 மெகாபிக்சல் கொண்ட 4cm மேக்ரோ லென்ஸும் இதில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், எஃப் / 2.5 துளை கொண்ட 32 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

ரியல்மி எக்ஸ் 7 புரோ எக்ஸ்ட்ரீம் எடிஷன் இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த மாறுபாடு 4,500mAh பேட்டரி மூலம் 65W பிஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்ட இயங்குதளத்தில் இயங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Realme X7 Pro Extreme Edition Launched With 12GB RAM, Triple Rear Camera Setup : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X