Realme X7 Pro பாக்ஸ் புகைப்படத்தை வெளியிட்ட சிஇஓ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் இதோ!

|

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தவதற்கு முன்னதாக அதன் பாக்ஸ் வடிவமைப்புகளை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ

ரியல்மி எக்ஸ் 7 மற்றும் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் ரியல்மி எக்ஸ் 7 சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரியல்மி நிறுவனம் தயாராகி வருகிறது. இருப்பினும் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் பெட்டி வடிவமைப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத்

ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத்

ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ரியல்மி எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 ப்ரோ மாடல்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் நேர்த்தியான கவர்ச்சிகர வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ்

ரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ரியல்மி எக்ஸ் 7 ப்ரோவும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதோடு ரியல்மி எக்ஸ் 7 ப்ரோவும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாடல் எண் RMX2121 உடன் ரியல்மி எக்ஸ் 7 புரோ 5ஜி, இந்திய தரநிலைகள் பணியகம் (பிஐஎஸ்) சான்றிதழில் காணப்பட்டது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

Realme X7 Pro விவரக்குறிப்புகள்

Realme X7 Pro விவரக்குறிப்புகள்

ரியல்மே எக்ஸ் 7 ப்ரோ 6.55 அங்குல முழு எச்டி + அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 4 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி, ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் செயலி உள்ளிட்ட ஆதரவுகளுன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுகள் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme X7 Pro Expected to Launching Soon in India: Phone Box Designs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X