தரமான டிஸைனுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்த Realme X7 Max 5G.. விலை என்ன?

|

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இன்று முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதி (நாளை) பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் போன்ற வலைத்தளங்களில் இதன் விற்பனைக்கான ஆரம்பம் தற்பொழுது துவங்கியுள்ளது. இப்போது ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரை விகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம்.

சிப்செட் மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

சிப்செட் மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயங்குகிறது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி + 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மற்றும் 256ஜிபி கொண்ட உள்ளடக்க ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இத்துடன் இதில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் ஆதரிக்க, மெமரி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது.

அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

கேமரா விபரம்

கேமரா விபரம்

இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல் 64 எம்பி பிரைமரி சென்சார் + 8 எம்பி வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கென்று 16 எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

பேட்டரி மற்றும் இணைப்பு விபரம்

பேட்டரி மற்றும் இணைப்பு விபரம்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 50 வாட் SuperDart பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..120 ஆண்டு இளமையோடு சாகாமல் உயிர் வாழ ஆசையா? 'சாகா வரத்திற்கான' விடையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி போனின் விலை என்ன?

ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி போனின் விலை என்ன?

இந்த புதிய ஸ்மார்ட்போன் Asteroid Black, Mercury Silver, Milky Way போன்ற நிறங்களில் கிடைக்கும். புதிய ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி சாதனம் 8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999 ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி வேரியண்டின் விலை ரூ.29,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் அல்லது realme.com வழியாக இந்த சாதனத்தை நாளை முதல் ஆர்டர் செய்யலாம்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Realme X7 Max in India is equipped with Dimensity 1200 5G processor comes for sale by tomorrow : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X