Home
Mobile

பிப்ரவரி 4ம் தேதி அறிமுகமாகும் புதிய Realme X7 5G ஸ்மார்ட்போனின் விலை இது தானா?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 4ம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மற்றும் அசத்தலான சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை இந்தியாவில் உருவாக்கியுள்ளது.

ரியல்மி எக்ஸ்7 5ஜி

ரியல்மி எக்ஸ்7 5ஜி

ரியல்மி எக்ஸ்7 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் சூப்பர் AMOLED ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட்

ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800U பிராசஸர் வசதி இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேமரா விபரம்

கேமரா விபரம்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி விபரம்

பேட்டரி விபரம்

வெளிவந்த தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்காக இந்த ஸ்மார்ட்போனில் மெமரி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இது 4310எம்ஏஎச் பேட்டரியுடன் 50W சூப்பர் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை

எதிர்பார்க்கப்படும் விலை

4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி +128 ஜிபி மாடல் ரூ. 19,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.21,999 என்ற விலையுடன் வரும் பிப்ரவரி 4ம் தேதி ஆன்லைன் மூலம் அறிமுகமாகிறது.

Best Mobiles in India

English summary
Realme X7 5G is expected to be available in India with a starting price of Rs. 19,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X