டூயல் செல்பீ கேமராவுடன் ரியல்மி X50m 5G ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி சாதனம் விரைவில் அனைத்து சந்தைக்கும் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1,080x2,400பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 764ஜி எஸ்ஒசி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+8எம்பி செகன்டரி சென்சார்+ 2எம்பி மூன்றாம் நிலை சென்சார்+ 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி+ 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். பின்பு வெள்ளை மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி சாதனத்தில் 4200எம்ஏச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5 ஜி, 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

அட்டகாசமான விலை
இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,500-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்50எம் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,500-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








