Home
Mobile

Realme X50 Pro பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் தனது விற்பனையை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

புதிய ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன்

புதிய ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் வரும் ஜூன் 1 ஆம் தேதி துவங்குகிறது. ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் 6.44' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேயுடன் கூடிட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் வருகிறது.

மிரட்டலான டிஸ்பிளே

மிரட்டலான டிஸ்பிளே

இதன் மிரட்டலான டிஸ்பிளே 1000 + நைட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் இணக்கம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே இன்பில்ட் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன் வருகிறது. ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஹைப்பர் பூஸ்ட் கேமிங் பயன்முறை மற்றும் 5 டைமென்ஷ்னல் வேப்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்டோரேஜ்

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்டோரேஜ்

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன், 2.84GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் உடன் கூடிய அட்ரினோ 650 ஜி.பி.யுடன் மூன்று எல்பிடிடிஆர் 5 ரேம் விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய ரியல்மே UI உடன் இயக்குகிறது.

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் கேமரா

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் கேமரா

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட ஒரு கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா இதில் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸுடன் கூடிய 2 மெகா பிக்சல் கேமராவுடன் டூயல் செல்ஃபி கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் பேட்டரி

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் பேட்டரி

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போன் 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் 4200 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 35 நிமிடங்களில் தொலைபேசியை 0 முதல் 100% வரை சார்ஜ் செய்ய முடியும். ஆடியோவைப் பொறுத்தவரை, கைபேசியில் அதன் ஸ்பீக்கர்களில் டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ இடம்பெறுகிறது, ஆனால் இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் விலை

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் விலை

ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.31,970 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் வேரியண்ட் தோராயமாக ரூ.35,150 என்ற விலையிலும் மற்றும் இதன் 12 ஜிபி ரேம் வேரியண்ட் இந்திய மதிப்பில் தோராயமாக சுமார் ரூ.38,340 என்ற விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme X50 Pro Player Edition Price Specification And Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X