சும்மா இல்ல ரூ.10,000 தள்ளுபடி: ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி வாங்க சரியான நேரம்- குறுகிய காலமே சலுகை!
பிளிப்கார்ட்டில் ரியல்மி தின விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை தினங்களில் பல்வேறு ரியல்மி ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் பெறலாம். இந்த விற்பனை தினங்களில் சலுகை விலையில் கிடைக்கும் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து பார்க்கலாம்.

முதன்மை ரக 5ஜி ஸ்மார்ட்போன்
ரியல்மி அறிவித்துள்ள ரியல்மி விற்பனை தின சலுகைகள் ஏப்ரல் 25 வரை நடைபெறுகிறது. நிறுவனத்தின் முதன்மை ரக 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி
ரியல்மி சலுகை விற்பனையில் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆரம்பத்தில் ரூ.37,999 என அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஜிஎஸ்டி மூலம் விலை அதிகரித்தன. இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.39,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.41,999 எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.47,999 எனவும் இருந்தது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடல் விலை ரூ.31,999 எனவும் இதன் ஹை எண்ட் வேரியண்டான 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.37,999-க்கும் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

Realme X50 Pro 5G விவரக்குறிப்புகள்
Realme X50 Pro 5G விவரக்குறிப்புகள் ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. அதோடு 6.44 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, அட்ரினோ 650 ஜி.பீ.யு மற்றும் 12 ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது.

64 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர்
ரியல்மே எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி-ல் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர் எஃப் / 1.8, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா வசதியும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் முன்பக்கத்தில் இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பு உள்ளது, இதில் 32 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 616 முதன்மை சென்சார் எஃப் / 2.5 லென்ஸும், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸும் உள்ளது.

65W சூப்பர் சார்ஜிங் ஆதரவு
ரியல்மே எக்ஸ் 50 ப்ரோ 5 ஜி 65W சூப்பர் சார்ஜிங் ஆதரவோடு 4,200 எம்ஏஎச் பேட்டரி வசதியும் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இதில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு சமீபத்தில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் வழங்கப்பட்டு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications