Home
Mobile

ஜனவரி 7: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50.!

ரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 7-ம் தேதி ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சற்று உயர்வான விலையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 7: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50.!

மேலும் ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடல் ஆனது முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஆன்லைனில் ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடலின் சில குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது அதைப்பற்றிய விவரங்களைப் பார்போம்.

ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் உடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குளதம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால்பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போனின் பின்பிறும் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஜனவரி 7: 6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50.!

ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போனில் 6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி எக்ஸ்50 5ஜி சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme X50 5G With SD 765G SoC Slated For January 7 Launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X