Home
Mobile

Realme X50 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!

ரியல்மி நிறுவனம் சினாவில் ரியல்மி எக்ஸ்50 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அனைத்து சந்தைகளிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2400 x 1080 பிக்சல் திர்மானம்

2400 x 1080 பிக்சல் திர்மானம்

ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.57-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட்

ரியல்மி எக்ஸ்50 5ஜி சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி எக்ஸ்50 5ஜி

ரியல்மி எக்ஸ்50 5ஜி சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி/ 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்எனக் கூறப்படுகிறது.

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

ரியல்மி எக்ஸ்50 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி டெலி போட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 16எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமராவும் இவற்றுள் அடக்கம்.

4200எம்ஏஎச் பேட்டரி

4200எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி எஸ்50 5ஜி ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 30வாட் VOOCஃபிளாஸ்சார்ஜ் வசதி இவற்றுள் அடக்கம். மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, புளூடூத் 5இ ஜிபிஎஸ்,என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 2,499யுவான்(ரூ.25,805)
6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 2,999யுவான்(ரூ.30,970)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை 3099யுவான்(ரூ.32,005)

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme X50 G Launched, Price, Specifications and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X