ரூ.16,999-விலையில் தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

இந்தியாவில் மிகவும் அதிகமாக எதிர்பார்த்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 20-ம் தேதி முதல்

டிசம்பர் 20-ம் தேதி முதல்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 20-ம் தேதி முதல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனுடன் ரூ.3,999மதிப்புள்ள ரியல்மி இயர்பட்ஸ் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

அட்டகாசமான டிஸ்பிளே வசதி

இந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

ரயில் பயணிகள் கவனிக்கவும்: ஐஆர்சிடிசியின் புதிய சேவை.!ரயில் பயணிகள் கவனிக்கவும்: ஐஆர்சிடிசியின் புதிய சேவை.!

அருமையான சிப்செட்

அருமையான சிப்செட்

வசதி ரியல்மி எக்ஸ்2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா வசதி

கேமரா வசதி

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme X2 with Snapdragon 730G chipset, Realme Buds Air launched in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X