Home
Mobile

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.!

ரியல்மி நிறுவனம் இன்று ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில்
ரியல்மி எக்ஸ் 2ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தககது.

 ரியல்மி எக்ஸ்2

மேலும் இப்போது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ்2 சாதனங்களுக்கு இடையில் என்னென்ன அம்சங்கள் மற்றும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது என்று முழுமையாகப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா வசதி

கேமரா வசதி

ரியல்மி எக்ஸ்2 சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின் பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 30வாட் பாஸ்ட் சார்ஜர் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உறுதி செய்யும் வகையில் டால்பி அட்மோஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது.

இந்த ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

எதிர்பார்க்கப்படும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ விலை

எதிர்பார்க்கப்படும் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.27,300/-

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.29,300/-


12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.33,400/-

ரியல்மி எக்ஸ்2 சாதனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் எனத் தெளிவாக தெரியவில்லை, இருந்தபோதிலும்ரூ.15,910-விலை அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme X2 Pro vs Realme X2: What’s different : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X