Home
Mobile

ரூ.4,000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ.!

பிளிப்கார்ட் வலைதளத்தில் மிகவும் எதிர்பார்த்த ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.4000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் குறிப்பிட்ட
சலுகை கிடைக்கும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டால்பி அட்மோ

டால்பி அட்மோ

Jio இசிம் சேவை உடன் அட்டகாச மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன்: அடுத்தக்கட்டம் நோக்கி இந்தியா!இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது மற்றும் 91.7 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பின்பு டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின் பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme X2 Pro now available for as low as Rs 23,999 on Flipkart And More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X