விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாஸ்டர் எடிஷன்.!

|

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாஸ்டர் எடிஷன் விற்பனைக்கு வந்துள்ளது, அதன்படி 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ எடிஷன் விலை ரூ.34,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டால்பி அட்மோ

டால்பி அட்மோ

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது மற்றும் 91.7 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பின்பு டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின் பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme X2 Pro Master Edition to go on sale today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X