ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் கேமரா அம்சத்திற்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது புதிய கலர்ஓஎஸ் 6.0 புதுப்பிப்பு 580MB அளவு மற்றும் பதிப்பு எண் RMX1931EX_11.A.07 உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் கேமராவின் நைட்ஸ்கேப் தரத்தையும்இ எச்.டி.ஆரின் கேமரா தரத்தையும் மேம்படுத்துகிறது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது மற்றும் 91.7 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பின்பு டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிகஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின் பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் விலை ரூ.33,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








