Home
Mobile

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மி நிறுவனம் அதன் புதிய ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. விரைவில் அனைத்து ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடல்களுக்கும் இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ மாடலின் விலை ரூ.33,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ டிஸ்பிளே

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டால்பி அட்மோ

டால்பி அட்மோ

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பேனல் டிசி டிம்மிங் 2.0 தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது மற்றும் 91.7 சதவிகிதம் அளவிலான ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தையும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது. பின்பு டால்பி அட்மோஸ் உடனான இரட்டை ஸ்பீக்கர்கள் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ தொழில்நுட்ப ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி இந்த போனின்பின்புறம் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme X2 Pro gets Android 10-based Realme UI beta update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X