அசத்தலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ஆன்லைனில் கசிந்தது.!
ரியல்மி நிறவனம் நாளை புதிய ரியல்மி, எக்ஸ்2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை
ஆன்லைனில் கசிந்த தகவலின் அடிப்படையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 என்றும், பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை
ரூ.20,999என்றும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி
இந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த
சாதனம் வெளிவரும்.

அருமையான சிப்செட் வசதி
ரியல்மி எக்ஸ்2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா வசதி
ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி டெப்த்சென்சார் + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications