டிசம்பர் 17: தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் வரும் டிசம்பர் 17-ம் தேதி தனது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்
செய்யப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 730ஜி
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 730ஜி கொண்டு இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை
மேலும் 91 மொபைல்ஸ் தளத்தில் வெளிவந்த அறிவிப்பின்படி ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலைநிர்ணயம் ஆனது ரூ.15,910ஆகும். இருந்தபோதிலும் அதிகாரபூர்வமான தகவல்கள் கிடைக்கும்வரை நாம் காத்திருக்கவேண்டியது அவசியமாகிறது. பின்பு இந்த சாதனம் கண்டிப்பாக குறிப்பிட்ட சலுகைகளுடன் விற்பனைக்கு வரும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி
இந்த ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புவசதியுடன் இந்த சாதனம் வெளிவரும்.

அருமையான சிப்செட் வசதி
ரியல்மி எக்ஸ்2 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி சிப்செட் உடன் அட்ரினோ 618ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

கேமரா வசதி
ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பிடெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ என மொத்தம் நான்னு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ,
டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி,ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.


Click it and Unblock the Notifications








