மிரட்டலான கேமராக்களுடன் ரியல்மி X2 அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.!
அன்மையில் ரியல்மி நிறுவனம் இந்தியாவில ரியல்மி எக்ஸ்டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதைதொடர்ந்து ரியல்மி X2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். மேலும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ரியல்மி X2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி X2 டிஸ்பிளே
ரியல்மி X2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மிரட்டலான கேமரா
ரியல்மி X2 சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ்+ 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712ஜி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ரியல்மி X2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 30வாட் பாஸ்ட் சார்ஜர் ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சவுண்ட் சிஸ்டம் உறுதி செய்யும் வகையில் டால்பி அட்மோஸ் ஆதரவுகளை கொண்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ரியல்மி X2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.16,100-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications