பாப்-அப் செல்பி மேராவுடன் இந்தியாவில் கலக்க வரும் ரியல்மி எக்ஸ்.!
இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு விரைவில் ரியல்மி X எனும் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளத
இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு விரைவில் ரியல்மி X எனும் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரியல்மி X வேரியண்ட்:
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் சான்று பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பி.ஐ.எஸ். சான்றுகளின் படி RMX1901 மற்றும் RMX1945 மாடல் நம்பர்களை கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி X வேரியண்ட்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிறப்பு அம்சம்கள்:
குவால்காம் ஸ்னாப்டிரான் 730 பிராசஸர் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக ரியல்மி X சீரிஸ் இருக்கும். சிறப்பம்சங்களை பொருத்தவைர ரியல்மி X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, பாப்-அப் செல்ஃபி கேமரா, பின்புறம் டூயல் ஏ.ஐ. கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

3680 எம்ஏஹெச் பேட்டரி:
இதன் பிரைமரி கேமராவை பொருத்தவரை 48 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0, 3680 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

சீனாவில் அறிமுகம்:
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறு. அந்த வகையில் சீனாவில் மே மாத வாக்கில் அறிமுகம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications