Home
Mobile

அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்! மார்வெல் ரசிகர்கள் ஆரவாரம்!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மார்வெல் உடன் ரியல்மி கைகோர்த்து

மார்வெல் உடன் ரியல்மி கைகோர்த்து

சென்ற வார துவக்கத்தில் ரியல்மி நிறுவனம், மார்வெல் நிருவட்டத்துடன் அதிகாரப்பூர்வமாக இனைந்து கொண்டது. மார்வெல் நிறுவனத்தின் அடுத்து திரைப்படமான ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் கம்மிங் திரைப்படைத் மையமாகக் கொண்டு ரியல்மீ நிறுவனம் தந்து புதிய ரியல்மி எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலை உருவாக்கியுள்ளது.

ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் கம்மிங்

ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் கம்மிங்

சீன ஸ்மார்ட்போன் சந்தையில், இந்த புதிய ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன் (Realme X Spider-Man: Far From Home edition)ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்ட விற்பனை ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்கும் என்ற அறிவிப்பையும் ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது.

ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன்

ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன் ஸ்பெஷல் எடிஷன்

தற்பொழுது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன், ஸ்பைடர்மேன் ஐகானுடன் அட்டகாசமான நிறத்தில் சிவப்பு பேக் கேஸ் உடன் கூடிய 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலையில் ரியல்மி எக்ஸ் விற்பனை

ஜூலையில் ரியல்மி எக்ஸ் விற்பனை

சீன சந்தையில் இந்த ரியல்மி எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பின்படி ரூ.18,000 என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விற்பனை ஜூலை 9 ஆம் தேதி துவங்குவதனால் இந்தியச் சந்தையில் இதன் விற்பனை தேதி ஜூலை 3 ஆம் வாரத்திற்கு தள்ளிப்போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.

சியோமி ரெட்மி K20 போட்டியாக ரியல்மி எக்ஸ்

சியோமி ரெட்மி K20 போட்டியாக ரியல்மி எக்ஸ்

சியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த மதம் வெளியிடப்படவுள்ளது, அதே நேரத்தில் ரியல்மி நிறுவனத்தின் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப் டிராகன் 710 சிப்செட்

ஸ்னாப் டிராகன் 710 சிப்செட்

சியோமி ரெட்மி K20 ஸ்மார்ட்போன் போன்றே ரியல்மி எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனிலும் பாப் அப் செல்ஃபீ கேமரா, நாட்ச்லெஸ் டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் ஸ்னாப் டிராகன் 710 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்

  • 6.53' இன்ச் FHD+ AMOLED நாட்ச்லெஸ் டிஸ்பிளே
  • 2.2Ghz ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
  • 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
  • ColorOS 6.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
  • 48 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் கேமரா
  • 16 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபீ கேமரா
  • Wi-Fi 802.11 a/b/g/n/ac
  • புளூடூத் v5.00
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 3,765 எம்ஏஎச் பேட்டரி
  • நிறம்: ஸ்டீம் வைட் மற்றும் பங்க் ப்ளூ
  • விலை: ரூ.18,000 (எதிர்பார்க்கப்படுகிறது)

Best Mobiles in India

English summary
Realme X Spider-Man: Far From Home edition will launch next month in india : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X