Home
Mobile

பிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.!

மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் இன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் வழியே விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இரவு 8மணிக்கு இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரியல்மி எக்ஸ் வடிவமைப்பு

ரியல்மி எக்ஸ் வடிவமைப்பு

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் கேமரா அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான விலை:

அட்டகாசமான விலை:

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.16,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.19,999-ஆக உள்ளது.

டிஸ்பிளே வசதி:

டிஸ்பிளே வசதி:

வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை அருமையாகப் பயன்படுத்தும்படி இதன் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது, அதன்படி 6.53-இனச் எச்டி பிளஸ் நாட்ச்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு 1080 x 2340 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட் வசதி:

எதிர்பார்க்கப்பட்ட சிப்செட் வசதி:

இந்த ஸ்மார்ட்போனின் மிகவும் எதிர்பார்த்த சிப்செட் வசதி வழங்கப்பட்டுள்ளது, அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாதனம் வெளிவருவதால் இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா:

மிரட்டலான கேமரா:

துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் விதமாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி
சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 16எம்பி பாப்-அப் செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

இந்த ஸ்மார்ட்போனில் 3765எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், VOOC ஃப்ளாஷ் சார்ஜ், புளூடூத் வி 5.0 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்:

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்:

ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இருப்பதால் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும், பின்பு சிறந்த ஆடியோ வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme X sale today on Realme com Flipkart price specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X