Home
Mobile

மலிவு விலையில் அதிக சலுகையுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை! ரியல்மி X மற்றும் ரியல்மி 3i விற்பனை!

ரியல்மி X (Realme X)மற்றும் ரியல்மி 3i(Realme 3i) என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில்  பாப் அப் செல்ஃபி கேமரா

பட்ஜெட் விலையில் பாப் அப் செல்ஃபி கேமரா

பட்ஜெட் விலையில் அட்டகாசமான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு ரியல்மி X ஒரு நல்ல சாய்ஸ். அட்டகாசமான பிரீமியம் டிசைனில் களமிறங்கியுள்ள ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

48 மெகா பிக்சல் கேமரா

48 மெகா பிக்சல் கேமரா

அதிநவீன பாப் அப் செல்ஃபி கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா ரியல் மி எக்ஸ் போனில் 6.53' இன்ச் கொண்ட முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளேயுடன் விற்பனைக்குப் பல சலுகைகளுடன் இன்று விற்பனையைத் துவங்குகிறது.

மலிவு விலையில் ரியல்மி 3i ஸ்மார்ட்போன்

மலிவு விலையில் ரியல்மி 3i ஸ்மார்ட்போன்

அதேபோல் ரியல்மி 3i ஸ்மார்ட்போன் ஹீலியோ பி 60 சிப்செட் உடன் கொண்ட 4230 எம்ஏஎச் பேட்டரி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 3i ஸ்மார்ட்போன் 6.2' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன் கூடிய வாட்டர் டிராப் நாட்சுடன், 13 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் மலிவு விலையில் இன்று முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் கூடுதல் சலுகை

ரியல்மி எக்ஸ் கூடுதல் சலுகை

இன்றைய பிளிப்கார்ட் விற்பனையில், ரியல்மி எக்ஸ் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வட்டி இல்ல தவணை முறை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆக்சிஸ் பேங்க் பயனர்களுக்கு 10% கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எச்.டி.எஃப்.சி பயனர்களுக்கு 5% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.7000திற்கான ஜியோ கேஷ்பேக் வவுச்சர்களும் இச்சலுகையுடன் வழங்கப்படுகிறது.

ரியல்மி 3i கேஷ்பேக் சலுகை

ரியல்மி 3i கேஷ்பேக் சலுகை

ரியல்மி 3i ஸ்மார்ட்போன்களுக்கு வட்டி இல்ல தவணை வெறும் மாதம் ரூ.278 என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆக்சிஸ் பேங்க் மற்றும் எச்.டி.எஃப்.சி பயனர்களுக்கு 5% கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது. ரூ.5,750 மதிப்புடைய உடனடி கேஷ்பேக் ரியல்மி ஆன்லைன் ஷாப்பில் வழங்கப்படுகிறது. இன்னும் கூடுதல் சலுகையை அறிய பிளிப்கார்ட் தளத்தை அணுகுங்கள்.

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்:

ரியல்மி எக்ஸ் சிறப்பம்சங்கள்:

  • 6.53' இனச் 1080 x 2340 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் நாட்ச் லெஸ் டிஸ்பிளே
  • கார்ணிங் கொரில்லா கிளாஸ் 5
  • 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூப்பிட ColorOS 9 இயங்குதளம்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
  • 48எம்பி மெயின் சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார்16எம்பி
  • 16 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா
  • 4ஜி எல்டிஇ
  • வைஃபை 802.11ஏசி
  • ஜிபிஎஸ்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • VOOC பிளாஷ் சார்ஜ் 3.0
  • 3765 எம்ஏஎச் பேட்டரி
  • விலை: 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 மட்டுமே
    8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999 மட்டுமே

      ரியல்மி 3i சிறப்பம்சங்கள்:

      ரியல்மி 3i சிறப்பம்சங்கள்:

      • 6.2' இன்ச் 1520 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
      • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
      • மீடியாடெக் ஹீலியோ பி60 பிராசஸர்
      • 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் / 32ஜிபி மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
      • 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உடன் கூடிய 2 மெகா பிக்சல் செகன்டரி கேமரா
      • 13 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
      • ஆண்ட்ராய்டு 9.0 பை உடன் கூடிய ColorOS 6 இயங்குதளம்
      • 4230 எம்ஏஎச் பேட்டரி 10W சார்ஜிங்

      • விலை: 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.7,999 மட்டுமே.
        4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9,999 மட்டுமே.

Best Mobiles in India

English summary
Realme X Realme 3i to Go on Sale Today In Flipkart Online Shopping Market With Extra Offers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X