Home
Mobile

ஆடிப்போன மார்க்கெட்.. 7500mAh பேட்டரி உடன் புது போன்.. Realme-யின் உண்மையான ஆட்டம் இனிமே தான்!

7000mAh லாம் ஒன்னுமே இல்ல.. இனிமேல் தான் "பிக் பேட்டரி போன்களுக்கு" இடையிலான உண்மையான யுத்தம் நடக்கப்போவது போல் தெரிகிறது. ஐக்யூ (iQOO) நிறுவனம் தொடர்ச்சியான முறையில் பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களை (அதாவது 7000mAh மற்றும் 7000mAh+ கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை) அறிமுகம் செய்து வரும் வேளையில்.. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமும் தன் பங்கிற்கு 1 பிக் பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது!

அது ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷன் (OnePlus Ace 5 Racing Edition) ஸ்மார்ட்போன் ஆகும். இது 7100mAh பேட்டரி உடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதோடு 6700mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்ட்ரா (OnePlus Ace 5 Ultra) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்று ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸின் (OnePlus Nord 5 Series) கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7500mAh பேட்டரி.. Realme-யின் உண்மையான ஆட்டம் இனிமே தான்!

7100mAh பேட்டரி உடன் ஒரு ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டால் அது உண்மையிலேயே மிகப்பெரிய யுஎஸ்பி (Unique Selling Point) ஆக இருக்கலாம். ஏனென்றால் ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் பெரும்பாலும் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களாக இருக்கும். மேலும் ஜூன் 5 ஆம் தேதி, பிளாக்ஷிப் பிரிவின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலை விட (6260mAh) பெரிய பேட்டரியாக இருக்கும்!

இதற்கிடையில் ரியல்மி உலகளாவிய சந்தையில் 7000mAh பேட்டரி உடனான ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) மற்றும் ரியல்மி ஜிடி 7டி (Realme GT 7T) மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது. ஆனாலும் பிக் பேட்டரி விஷயத்தில் ரியல்மி "இதோடு" நிறுத்திக்கொள்வதாய் இல்லை. இந்நிறுவனம் அதன் அடுத்த ஸ்மார்ட்போனில் பேட்டரி தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வெளியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் 7500mAh பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது ரியல்மி ஜிடி 7 மற்றும் ரியல்மி ஜிடி 7டி மாடல்களில் உள்ளதை விட அதிக கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒப்போ (Oppo) மற்றும் விவோ (Vivo) போன்ற பிற சீன பிராண்டுகள் ஏற்கனவே கேமரா தொழில்நுட்பம் (Camera Technology) / போட்டோகிராஃபி எக்ஸ்பீரியன்ஸில் (Photography Experience) எல்லைகளை தாண்டி வருகின்றன. ஆனால் ரியல்மி பேட்டரி லைஃப்பில் (Battery Life) அதிக கவனம் செலுத்துவதுபோல் தெரிகிறது. இது நிச்சயம் இந்தியர்களை ஈர்க்கக்கூடிய ஒரு வழியாக இருக்கும். ஹைஎண்ட் பேட்டரி லைஃப்-ஐ வழங்குவதன் மூலம் ரியல்மி அதன் அடையாளத்தை விரிவுபடுத்த விரும்புவது போல் தெரிகிறது!

எந்த ஸ்மார்ட்போனில் 7500mAh பேட்டரி இடம்பெறலாம்? நினைவூட்டும் வண்ணம் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஒரு பெரிய 6500mAh செல்லுடன் அறிமுகமானது. எனவே அதன் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) மாடல் ஆனது 7500mAh என்கிற அளவிலான மிகப்பெரிய பேட்டரியை கொண்டிருக்கலாம்.

இந்த பிக் பேட்டரி போன் பஞ்சாயத்தை தொடங்கி வைத்தது ஐக்யூ நிறுவனம் தான். இதுதான் 7300mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து, இந்திய மொபைல் சந்தையில் புதிய ஆட்டத்தை தொடங்கி வைத்தது. அது ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G) ஸ்மார்ட்போன் ஆகும். இது கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமானது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Working on 7500mAh Battery Smartphone to Compete OnePlus iQOO
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X