Home
Mobile

realme V60 Pro மாஸ் கிளப்பிடுச்சு.. 2TB மெமரியுடன் பக்கா பட்ஜெட் Phone.. 2 வருட வாரன்டி.. 50MP டூயல் கேமரா..

ரியல்மி (realme) நிறுவனம் பட்ஜெட் பிரியர்களை குறிவைத்து, இப்போது அதன் புது ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி வி60 ப்ரோ (realme V60 Pro) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனமாக நிறுவனத்தின் V சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்மி V60 ப்ரோ (realme V60 Pro) பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். வாருங்கள் நேரடியாக விஷயத்திற்கு செல்லலாம்.

ரூ. 15,000 முதல் ரூ. 20,000 பட்ஜெட் பிரிவில் ஒரு அட்டகாசமான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க திட்டமிட்டவர்களுக்கு இந்த புதிய ரியல்மி வி60 ப்ரோ (realme V60 Pro) ஒரு அற்புதமான சாய்ஸ் ஆக அமைகிறது. காரணம், இந்த பட்ஜெட் விலை பிரிவில் இந்த சாதனம் பல அட்டகாசமான அம்சங்களை அடக்கியுள்ளது. realme V60 Pro போனில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக என்ன பேக் செய்துள்ளதென்று இப்போது பார்க்கலாம்.

realme V60 Pro மாஸ் கிளப்பிடுச்சு.. 2TB மெமரியுடன் பக்கா பட்ஜெட் Phone

ரியல்மி வி60 ப்ரோ சிறப்பம்சம் (realme V60 Pro Specifications):
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட 720x 1604 பிக்சல் கொண்ட HD+ IPS LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 6300 பிராசஸர் (Octa Core MediaTek Dimensity 6300 6nm processor) உடன் வருகிறது.

இந்த புதிய ரியல்மி V60 ப்ரோ (realme V60 Pro) சாதனம் 12GB LPDDR4X ரேம் (RAM) உடன் 256GB / 512GB UFS 2.2 ஸ்டோரேஜ் (storage) ஆதரவை கொண்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இந்த போனில் 2TB வரையிலான எக்ஸ்பெண்டபிள் மெமரி அம்சமும் மைக்ரோஎஸ்டி (microSD) வழியாக பயன்படுத்த கிடைக்கிறது. பட்ஜெட் செக்மென்ட்டில் 2TB ஸ்டோரேஜ் ஆதரவு ஒரு சிறந்த விஷயம் மக்களே.

ரியல்மி வி60 ப்ரோ கேமரா (realme V60 Pro Camera):

இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 (Android 14 with realme UI 5.0) இயங்குதளத்தில் இயங்குகிறது. இவை டூயல் நானோ சிம் கார்டு (Dual SIM nano + nano + microSD) ஆதரவை வழங்குகிறது. கேமராவை பற்றி பேசுகையில், இது 50MP உடன் டூயல் ரியர் கேமராவை LED பிளாஷ் உடன் வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்த மொபைல் 8MP செல்பி கேமராவை கொண்டுள்ளது.

ரியல்மி V60 ப்ரோ மொபைல் (realme V60 Pro Mobile) அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker) உடன் சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகிறது. IP68 + IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பை வழங்குகிறது.

இணைப்பு அம்சத்தில், இந்த போன் 5G SA / NSA, டூயல் 4G வோல்ட்இ (VoLTE), வைஃபை (Wi-Fi 802.11 ac 2.4GHz + 5GHz), ப்ளூடூத் (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலீலியோ (Galileo), QZSS ஆகியவற்றை ஆதரிக்கிறது. புதிய ரியல்மி V60 ப்ரோ மொபைல் (realme V60 Pro Mobile) ஒபிசிடியன் கோல்டு (Obsidian Gold), ராக் பிளாக் (Rock Black) மற்றும் லக்கி ரெட் (Lucky Red) ஆகிய மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ரியல்மி வி60 ப்ரோ விலை (realme V60 Pro Price):

realme V60 Pro ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 18,675 என்ற விலையிலும், இதன் 12GB + 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 21,015 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 1 வருட வாட்டர் ப்ரூப் வாரன்டி (1 year waterproof warranty) மற்றும் 2 வருட டிவைஸ் வாரன்டியுடன் (2 year device warranty) வருகிறது. சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவிற்கு விரைவில் வருகிறது.

Best Mobiles in India

English summary
realme V60 Pro New Budget Phone With 2TB Memory 1 Year Waterproof and 2 Year Warranty 50MP Dual Camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X