Home
Mobile

தீப்பறக்கும் பட்ஜெட்.. வெறும் ரூ.14000 போதும்.. FHD+ டிஸ்பிளே.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மார்கெட் மிரளும்படியான கம்மி பட்ஜெட்டில் பக்கா அம்சங்களை கொண்ட ரியல்மி வி50 (Realme V50) மற்றும் ரியல்மி வி50எஸ் (Realme V50s) போன்கள் வெளியாக இருக்கின்றன. இந்த நேரத்தில் அந்த போன்களின் விலை மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விவரம் இதோ.

ரியல்மி வி50, ரியல்மி வி50எஸ் அம்சங்கள் (Realme V50, Realme V50s Specification): இந்த வி சீரிஸ் போன்கள் ரியல்மி 11எக்ஸ் மாடலை போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இந்த போன்களில் 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி பேனல் (LCD Panel) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

 ரூ.14000 போதும்.. FHD+ டிஸ்பிளே.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி!

அதோடு ஹோல்-பன்ச் டிசைன் (Hole Punch Design) கொண்டிருக்கிறது. இந்த மாடல்களில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எல்ஓசி (MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் வருகிறது. அதோடு ரியல்மி யுஐ (Realme UI) ஓஎஸ் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) வருகிறது.

ஆகவே, 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இதுவொரு ஏஐ (AI) மாடல் கேமராவாகும். இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் இருக்கின்றன.

இந்த ரியல்மி வி சீரிஸ் போன்களில் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (side-facing fingerprint scanner) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. இந்த போன்களில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து இந்த போன் 187.65 கிராம் எடை கொண்டிருக்கிறது.

 ரூ.14000 போதும்.. FHD+ டிஸ்பிளே.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி!

ஆகவே, மிகவும் ஸ்லிம் டிசைனில் எதிர்பார்க்கலாம். இந்த போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் கொண்டிருப்பதால், 5ஜி மாடல்களாகவே இருக்க வேண்டும். ஆகவே, 5ஜி எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அதேபோல ப்ளூடூத் 5.3, வை-பை 802 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவையும் கொடுக்கப்படலாம்.

இந்த போன்கள் மிட்நைட் பிளாக் (Midnight Black), பர்பிள் டவுன் (Purple Dawn) ஆகிய 2 கலர்களில் வெளிவர இருக்கிறது. ரியல்மி 11எக்ஸ் போனிலும், இதே கலர்கள் இருக்கின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,000ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,000ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,000ஆக இருக்கிறது. இந்த போன்கள் வரும் டிசம்பரில் சீனாவில் வெளியாக இருக்கின்றன. அதற்கு அடுத்த சில வாரங்களில் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்மியான விலையில் நல்ல டிசைனில் 5ஜி போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த சீரிஸ் போன்கள் நல்ல தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Realme V50 With 8GB RAM, 5000mAh Battery Expected Launch Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X