Home
Mobile

மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.13,910 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

பட்ஜெட் விலை பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 16ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டாசான அம்சங்களை கொண்ட ரியல்மி வி50 (Realme V50 Series) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரியல்மி வி50, வி50எஸ் அம்சங்கள் (Realme V50, V50s Specification): இந்த போன்களில் ஹோல்-பன்ச் டிசைன் (Hole-Punch Design) கொண்ட 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும்.

ரூ.13910 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இதில் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4 (Realme UI 4) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் எல்ஓசி (MediaTek Dimensity 6100 Plus SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போன்களில் 13 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera) வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.

அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் இருக்கிறது. இதில் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. இந்த ரியல்மி வி50 சீரிஸ் போன்களில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது.

ரூ.13910 போதும்.. 12GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

இந்த மாடல்களில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் வருகிறது. இந்த போன் 190 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல ஸ்லிம் டிசைனில் 7.98 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த போன் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பர்பிள் டவுன் (Purple Dawn) ஆகிய 2 கலர்களில் வருகிறது.

இந்த போன்களின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகிறது. அதேபோல வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.

ரியல்மி வி50 போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,910ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,850ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ரியல்மி வி50எஸ் போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,230ஆக இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,875ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் டிசைன் மற்றும் அம்சங்களை பார்த்தால் இந்தியாவில் ஏற்கனவே வெளியான ரியல்மி 11எக்ஸ் 5ஜி மாடலை போலவே இருக்கின்றன.

இருப்பினும், ரியல்மி 11எக்ஸ் போனில் அதிகபட்சமாக 128 ஜிபி மட்டுமே மெமரி வருகிறது. ஆனால், இந்த ரியல்மி வி50 மாடல்களில் 256 ஜிபி மெமரி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியாவில் கூடுதல் மெமரி வேரியண்ட்களாக இந்த போன்கள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme V50 16GB RAM, Dimensity 6100 Plus Launched in China Here Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X