Home
Mobile

Realme V25 விரைவில் அறிமுகம்.. இது Oppo K9 5G போனின் மாறுபாட்ட வேரியண்ட்டா?

ரியல்மி வி 25 விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. புதிய லீக் தகவல், ரியல்மி வி 25 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768 ஜி சிப்செட் மூலம் இது இயக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ கே 9 5 ஜி போன்ற விவரக்குறிப்புகளைக் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரியல்மி வி 25 சீனாவின் டெனா சான்றிதழ் தளத்தில் மாதிரி எண் RMX3143 உடன் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Realme V25 ஸ்மார்ட்போன்

Realme V25 ஸ்மார்ட்போன்

மேலும் அதன் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகளும் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பு இருக்கலாம் என்று TENAA பட்டியல் தெரிவிக்கிறது. Realme யின் ஸ்மார்ட்போன் மாடல் எண் RMX3143 உடன் TENAA காணப்பட்டதாகக் கூறும் ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் வெளியாகவிருக்கும் Realme V25 ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. Realme V25 ஒரு குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 768G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

TENAA பட்டியலுடன் வரும் படங்கள், ரியல்ம் வி 25 ஒரு பஞ்ச் ஹோல் வடிவமைப்பு கொண்ட டிஸ்பிளேயுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் செவ்வக தொகுதிக்குள் ஒற்றை வரியில் வைக்கப்பட்டுள்ள சென்சார்களைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது அண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் 6.43 இன்ச் முழு எச்டி பிளஸ் உடன் 1,080 x 2,400 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோரேஜ் விபரம்

ஸ்டோரேஜ் விபரம்

இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் விருப்பங்களுடன் ஜோடியாக 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி மூலம் இந்த தொலைபேசி இயக்கப்படுகிறது. 128 ஜிபி மற்றும் 256 ஜிபி சேர்க்க சேமிப்பு விருப்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.ரியல்மி வி 25 இல் 64 மெகாபிக்சல் பிரதான கேமராவும், 8 மெகாபிக்சல் மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமராவும் இருக்கலாம் என்று TENAA பட்டியல் தெரிவிக்கிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி சென்சார் இடம்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,400 எம்ஏஎச் பேட்டரி

4,400 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி வி 25 ஸ்மார்ட்போன் 4,400 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிளாக் மற்றும் ப்ளூ வண்ண விருப்பங்களில் வரும் என்றும் கூறப்படுவதாக பட்டியல் தெரிவிக்கிறது. விவரக்குறிப்புகளைப் பார்க்கும்போது, ​​ஒப்போ கே9 5ஜி உடன் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகத் தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய விபரங்கள் மற்றும் கூடுதல் தகவலை வரும் காலத்தில் பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme V25 Tipped to Pack Snapdragon 768G SoC on TENAA Listing : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X