Home
Mobile

டைமன்சிட்டி 700 சிப் ஆதரவோடு அறிமுகமான ரியல்மி வி20 5ஜி- பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்: ஆனா ஒரு டுவிஸ்ட்!

ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனமும் மற்ற வி சீரிஸ் சாதனங்களை போன்று சீனாவை தவிர பிற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ரியல்மி நிறுவனம் பிரத்யேகமாக சீனாவில் மட்டும் வெளியிடும் வி சீரிஸ் தொடரில் கூடுதல் ஒரு மாடலாக ரியல்மி வி20 5ஜி இடம்பெற்றுள்ளது. இந்த மாடல் சாதனங்கள் சீனாவிற்கு வெளியே உருவாக்கப்படுவதும் இல்லை அறிமுகம் செய்வதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் ஆதரவு

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் ஆதரவு

ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப் ஆதரவு கொண்ட பட்ஜெட் விலை சாதனமாகும். ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவு, இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளிட்டவைகளைக் கொண்டிருக்கிறது. Gizmochina தகவலின்படி, புதிய ரியல்மி வி-சீரிஸ் சாதனம் சீனாவில் ஆஃப்லைன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போன் எந்தவொரு ஆன்லைன தளங்களிலும் பட்டியலிடப்படவில்லை. ரியல்மி வி21 சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்பது முன்னதாகவே ஊகிக்கப்பட்ட ஒன்றாகும்.

சீனாவிற்கான பிரத்யேக மாடல்

சீனாவிற்கான பிரத்யேக மாடல்

ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனின் சீன விலை CNY 999 ஆகும். அதாவது இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.11,300 ஆக இருக்கிறது. ரியல்மி நிறுவனம் அதன் வி-சீரிஸ் சாதனங்களை எப்போதும் சீனாவிற்கு வெளியே அறிமுகப்படுத்தியதில்லை எனவே இந்த வி20 5ஜி ஸ்மார்ட்போனும் பிற நாட்டு சந்தைகளில் கிடைக்க வாய்ப்பில்லை. ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனானது க்ளவுட் பிளாக் மற்றும் ஸ்டார் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வெளி வந்துள்ளது.

ரியல்மி வி20 5ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி வி20 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது பட்ஜெட் விலை சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எச்டி எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் கைரேகை சென்சார் ஆதரவு இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவுடன் கிடைக்கிறது. ரியல்மி வி20 5ஜி ஆனது ஆக்டோகோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என முன்புறத்தில் 5 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் இரட்டை கேமரா வசதி இருக்கிறது. 13 எம்பி பிரதான கேமரா மற்றும் 0.3 எம்பி இரண்டாம் நிலை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் தளங்களில் விற்பனையில்லை

ஆன்லைன் தளங்களில் விற்பனையில்லை

ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போன் ஆன்லைனில் விற்பனைக்கு பட்டியலிடப்படாத காரணத்தால் இதன் விவரக்குறிப்புகள் குறைவாகவே கிடைத்துள்ளன. ரியல்மி வி20 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறதா அல்லது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 50ஐ

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 50ஐ

ரியல்மி நிறுவனம் ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்களில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் மின்ட் க்ரீன் மற்றும் டார்க் ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியாகலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் அளவு கொண்ட் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இடம் பெறும் எனவும் இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் ஆதரவோடு சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Realme V20 5G Smartphone Launched With Dual Camera, 4GB RAM and More: Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X