நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Realme V15 5G ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம்.. விலை என்ன?

|

நீண்ட காலமாக டீஸர் மற்றும் லீக்ஸ் மூலம் மட்டும் வெளியாகிக்கொண்டிருந்த ரியல்மி நிறுவனத்தின் Realme V15 5G ஸ்மார்ட்போன் பல நாட்களுக்குப் பிறகு இப்போது ஒரு வழியாக ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 ஜி ஆதரவு கொண்ட Realme V15 5G ஸ்மார்ட்போன்

5 ஜி ஆதரவு கொண்ட Realme V15 5G ஸ்மார்ட்போன்

இந்த புதிய ஸ்மார்ட்போன் முதல் கட்டமாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இந்தியா போன்ற மற்ற ஸ்மார்ட்போன் சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 50W ஃபாஸ்ட் சார்ஜிங், டிரிபிள் ரியர் கேமரா மற்றும் ஹோல்-பஞ்ச் நாட்ச் டிஸ்பிளே டிசைனுடன் வருகிறது. ரியல்மி வி 15 மீடியாடெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட் உடன் வருகிறது. இது ஒரு 5 ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

டேர் டு லீப் (Dare To Leap)

டேர் டு லீப் (Dare To Leap)

Realme V15 5G ஸ்மார்ட்போனை நிறுவனம் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒன்று கோய் என்று அழைக்கப்படுகிறது மற்றும் நிறுவனத்தின் டேக்லைன்: 'டேர் டு லீப்' (Dare To Leap) என்ற வசனத்தையும் கொண்டுள்ளது. இந்த ரியல்மி வி 15 5 ஜி ஸ்மார்ட்போன், ஹவாய் நோவா 7 எஸ்இ 5 ஜி யூத் மற்றும் ஐக்யூ யு 3 போன்ற போன்களுடன் நேரடி போட்டியில் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

ரியல்மி வி 15 5 ஜி போனின் விலை

ரியல்மி வி 15 5 ஜி போனின் விலை

ரியல்மி வி 15 5 ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .15,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் இதன் 8 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ .22,700 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய Realme V15 5G ஸ்மார்ட்போன் கிரசண்ட் சில்வர், கோய் மற்றும் மிரர் லேக் ப்ளூ கலர் விருப்பங்களில் வருகிறது. இதன் விற்பனை ஜனவரி 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

Realme V15 5G சிறப்பம்ச விபரங்கள்

Realme V15 5G சிறப்பம்ச விபரங்கள்

 • 6.4' இன்ச் முழு எச்டி பிளஸ் 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட AMOLED டிஸ்பிளே
 • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 800U சிப்செட்
 • 6ஜிபி ரேம் / 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
 • மைக்ரோ எஸ்டி கார்டு (இல்லை)
 • அண்ட்ராய்டு 10 மேல் Realme UI
 • டிரிபிள் கேமரா அமைப்பு
 • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
 • 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ்

ரூ.8,999 விலையில் தரமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!ரூ.8,999 விலையில் தரமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பேட்டரி
 • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
 • 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
 • டூயல் நானோ சிம்
 • 5 ஜி
 • 4 ஜி எல்டிஇ
 • வைஃபை 802.11ac
 • புளூடூத் வி 5.1
 • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
 • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
 • டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
 • டிராக் எச்டி சவுண்ட் சப்போர்ட்
 • 65W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
 • 4310 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme V15 5G Smartphone Launched With Triple Rear Camera in China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X