6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரியல்மி வி13 ஸ்மார்ட்போன் 5ஜி
மேலும் இந்த ரியல்மி வி13 ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு, சிறந்த மென்பொருள் வசதி மற்றும் அசத்தலான கேமராக்கள் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி, ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்படன் வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 11
இந்த ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 5G சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

ரியல்மி வி13 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி வி13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனம் ரூ.20,000-விலையில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது


Click it and Unblock the Notifications