அசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ரியல்மி நிறுவனம் சீனாவில் புதிய ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்தத ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த புதிய ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பினை கொண்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் DRE-ஐ கூடுதலாகப் பெறுவீர்கள். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது டைனமிக் ரேம் விரிவாக்கம். இது ஆண்ட்ராய்டு உலகின் புதிய தொழில்நுட்ப புரட்சி ஆகும். குறிப்பாக உள் சேமிப்பகத்தை ரேமின் நீட்டிப்பாக பயன்படுத்த அனுமதிக்கிறது. எனவே இதன் கீழ் திறம்படி அதிக ஆப்களை ஒரே நேரத்தில் இயங்க அனுமதிக்கிறது. அதேபோல் இந்த புதிய தொழில்நுட்பம் 4ஜிபி மாறுபாட்டை 5ஜிபி வரை நீட்டிக்க ஆதரவு கொடுக்கிறது. பின்பு 6ஜிபி பதிப்பு 11ஜிபி வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 SoC சிப்செட் வசதியுடன் Mali G57 GPU ஆதரவும் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே எல்இடி பிளாஷ் ஆதரவுடன் ஒரு அசத்தலான கேமரா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்ள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் 8.4 மிமீ தடிமன் மற்றும் 189 கிராம் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஜி, 4 ஜிஇ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி வி11எஸ் 5ஜி. மேலும் 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி வி11எஸ் 5ஜி மாடலின் விலை CNY 1,399 (இந்திய மதிப்பில் ரூ.16,000). அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி வி11எஸ் 5ஜி மாடலின் விலை CNY 1,599 ( இந்திய மதிப்பில் ரூ.18,200).
விரைவில் ரியல்மி நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது 5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications